கொரோனா தொற்றுக்கு தடுப்பூசி மட்டுமே தீர்வு என்ற நிலையில், உலகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணிகளை முடுக்கிவிடப்பட்டுள்ளன. பெரும்பாலான உலக நாடுகள் அனைத்து மக்களுக்கும் 2-வது தவணை தடுப்பூசி போடும் பணியை நிறைவு செய்வதற்கு மிக அருகில் உள்ளன. மேலும் சில நாடுகளில் பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்தநிலையில், தென் ஆப்பிரிக்காவில் தோன்றிய உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. அமெரிக்கா, பிரிட்டன், இந்தியா உள்ளிட்ட 20 நாடுகளுக்கு மேலாக பரவியுள்ளது மேலும் பிரிட்டனில் ஒருவர் ஒமைக்ரான் தொற்றால் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
தொடர்ந்து டெல்டாவை விட வேகமாக பரவும் ஒமைக்ரான் தொற்றுக்கு எதிராக இப்போது பயன்படுத்தப்பட்டுவரும் தடுப்பூசிகள் குறைவான செயல்திறனை தான் கொண்டு இருக்கிறது என்று விஞ்ஞானிகள் சிலர் தெரிவித்துள்ளதால், மக்களிடையே பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், தடுப்பூசியால் மட்டுமே அதனை தடுக்க முடியாது என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுபற்றி ஜெனீவாவில் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், டெட்ராஸ் அதேநாம் ஒமைக்ரான் தற்போது வரை 77 நாடுகளில் பரவியுள்ளதாகவும் இன்னும் சில நாடுகளில் கண்டுபிடிக்காமல் இருப்பதாகவும், தெரிவித்துள்ளார்.
இதற்குமுன் பரவிய டெல்டா வகை கொரோனா வைரஸை விட ஒமைக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது. மேலும் ஒமைக்ரான் ஒமைக்ரானை சில நாடுகள் குறைத்து மதிப்பிடுகின்றனர் என்றும் அவர் வேதனை தெரிவித்துள்ளார். மேலும் தடுப்பூசியால் மட்டுமே ஒமைக்ரானை கட்டுப்படுத்த முடியாது என்று தெரிவித்த அவர், முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளி பின்பற்றுதல், சனிடைசர் கொண்டு கைகளை சுத்தம் செய்தல் போன்றவற்றை கடுமையாக பின்பற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். தொடர்ந்து தடுப்பூசி திறனை கணிசமான அளவில் ஒமைக்ரான் குறைப்பதாக சில தடுப்பூசி நிறுவனங்கள் கண்டறிந்துள்ளது. அவற்றிற்கான சான்றிதழ்களும் கிடைத்துள்ளன என்றும் அவர் கூறியுள்ளார்.