ஜார்கண்ட் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் ஐந்து கட்டங்களாக நடைபெற்றுவருகிறது. இதில் இரண்டு கட்ட தேர்தல் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், மீதமுள்ள மூன்று கட்ட தேர்தலுக்காக மத்திய ஆயுதக் காவல்படை வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் பொகாரோ பகுதியில் உள்ள சார்லி என்ற நிறுவனத்தில் 226ஆவது படாலியன் வீரர்கள் தங்கவைக்கப்பட்டிருந்தனர். இவர்களுக்கு இடையே நேற்று இரவு திடீரென எதிர்பாராவிதமாக ஏற்பட்ட மோதலில் இரண்டு வீரர்கள் உயிரிழந்தனர்.
இதில் துணை கமாண்டன்ட் அலுவலரும் உதவி ஆய்வாளரும் உயிரிழந்ததாகவும் இருவர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அலுவலர்கள் கூறுகையில், “இரண்டு வீரர்களின் உயிரிழப்புக்கு காரணமானவர் காயமடைந்த வீரர்களுக்குத்தான் இருக்க வேண்டும். இந்த மோதல் குறித்த காரணங்கள் இதுவரைத் தெரியவில்லை. இந்தச் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.