வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டத்திலுள்ள செங்குந்தபுரம் கிராமத்தில் பழனி செல்வன்-புனிதா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதிகளுக்கு 2 மகள்கள் இருக்கின்றனர். இதில் 2-வது மகளான புனிதா என்பவர் செவிலியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற பணி உயர்வுக்கான கலந்தாய்வில் பங்கேற்பதற்காக பழனி செல்வம் தனது குடும்பத்தினருடன் வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளார்.
இதனையடுத்து திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். அதன் பின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 43 பவுன் தங்க நகைகள் மற்றும் 75 ஆயிரம் ரூபாய் பணம் போன்றவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்து பழனி செல்வன் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.