வங்காள தேசத்தின் சுதந்திர பொன்விழாவிற்காக அங்கு 3 நாள் பயணம் சென்ற இந்திய ஜனாதிபதி இன்று அந்நாட்டின் பிரதமரை சந்தித்துப் பேசியுள்ளார்.
இந்திய நாட்டின் ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் என்பவர் உள்ளார். இவர் வங்காள தேசத்தின் சுதந்திர பொன் விழாவில் பங்கேற்பதற்காக அந்நாட்டிற்கு 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
இந்நிலையில் இன்று இந்தியாவின் ஜனாதிபதியான ராம்நாத் கோவிந்த் வங்காள தேசத்தின் பிரதமரான ஷேக் ஹசீனாவை சந்தித்து பேசியுள்ளார். அப்போது இரு நாட்டு தலைவர்களும் வங்காளதேசம் மற்றும் இந்தியாவிற்கு இடையிலான பரஸ்பர நலன்கள் குறித்தும், உறவு தொடர்பாகவும் பேசியுள்ளார்கள்.