நீட் தேர்வுக்கு எதிரான மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க கோரி நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், கல்வி மாநிலப் பட்டியலில் இருந்தது. இன்றைக்கு என் மத்திய அரசு பட்டியலுக்கு நீங்கள் எடுத்துக் கொண்டீர்கள், துணைவேந்தர்கள் தமிழ்நாட்டில் இல்லாத திறமை உள்ளவர்களா இதர மாநிலங்களில் இருக்கிறார்கள்.
துணைவேந்தர்கள் நியமனங்களில் மத்திய அரசு நேரடியாக தலையிடுகிறது. இங்கே இருக்கின்ற ஆளுநர் அவர்கள் தங்களுக்கு வேண்டியவர்களை, விருப்பப்பட்டவர்களை இதர மாநிலங்களில் கொண்டு வந்து இறக்குமதி செய்து புகழ்மிக்க அண்ணா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக நியமனம் செய்கின்றார்கள்.பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இன்று குலக்கல்வித் திட்டம் அமல்படுத்தப்படுகிறது.
பாரதியார் பல்கலைக்கழகத்தில் இவர்கள் சொல்வதைக் கேட்கவில்லை என்று சொன்னால் அங்கு இருக்கின்ற துணைவேந்தரை எச்சரிக்கிறார்கள்.மத்திய அரசு என்பது மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டிருந்த உரிமைகளை பறித்து, டெல்லியிலே உட்கார்ந்து கொண்டு இன்றைக்கு ஒரு சர்வாதிகார ஆட்சியை நோக்கி இந்திய நாட்டின் இன்றைக்கு தலைமைப் பொறுப்பேற்று என்ற ஒன்றிய அமைச்சர் நரேந்திரமோடி அவர்கள் ஒரு சர்வாதிகாரி தலைமையுடன் நடந்துகொள்கிறார்.
அதுதான் தமிழ்நாட்டில் இருக்கின்ற மாணவச் செல்வங்களோடு இந்த நீட் தேர்வு வேண்டாமா ? வேண்டுமா ?உங்களால் நாங்கள் வைக்கின்ற தேர்வு முறையில் நீங்கள் வெற்றி பெற முடியுமா என்ற கருத்து ஆய்விற்கு, ஒரு கலந்தாய்விற்கு விடவில்லை. சட்டத்தை கொண்டு வந்து நம் மீது திணிப்பது, இஸ்லாமியர்களுக்கு சி.ஏ, ஏ, என்.ஆர்.சி போன்ற சட்டங்களை கொண்டு வந்து திணிப்பது,
தொழிலாளர்களுக்கான சட்டங்களைக் கொண்டு வந்து திணிப்பது, சுற்றுச்சூழல் மாசு ஏற்படுகிறது, அதில் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையிலேயே கருத்தாய்வு கூட்டங்களை நடத்தி தான் அந்த மாவட்டத்தில் திட்டங்களை கொண்டு வர வேண்டும் என்பதை ஒரு சட்டத்தின் ஊடாக நீக்குவது என விமர்சித்தார்.