Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழகம் தான் டக்கரு…. பாஜக ஆளும் மாநிலம் வேஸ்ட்…. சவால் விட்ட வேல்முருகன் ..!!

நீட் தேர்வுக்கு எதிரான மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க கோரி நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன்,  நாங்கள் நீட் கொண்டு வந்தால் இங்கே தேனாறும் பாலாறும் ஓடும். இந்தியா முழுக்க மருத்துவத்துறையில் மறுமலர்ச்சி கிடைக்கும் என்கிறார்கள். நான் சொல்லுகிறேன் இன்று மத்திய அரசு ஆண்டு கொண்டிருக்கின்ற வடமாநிலங்களில் தமிழ்நாட்டினுடைய ஒரு மருத்துவக் கல்லூரிக்கு நிகராக ஒரு மருத்துவக் கல்லூரியை காட்டுங்கள், இன்றைக்கு பீகார், உத்திரப் பிரதேசத்தில், மோடி ஆளக்கூடிய  குஜராத்திலோ காட்டுங்கள்.

நான் அரசு கமிட்டியின் சார்பாக திருவள்ளூர் மாவட்டத்திற்கு சென்றோம், 400 கோடி ரூபாயில் அரசு மருத்துவமனை கட்டிடம் இந்த ஆண்டு 100 மாணவர்கள் படிப்பதற்கு அனுமதி தருகிறார்கள், அவ்வளவு  வசதியுடன் அற்புதமாக அமைந்து வானுயர்ந்து நிற்கிறது. நம்முடைய தமிழக அரசால் மருத்துவ கல்லூரியில் படித்திருக்கின்ற சாதனை.

இன்றைக்கும் சென்னை மருத்துவக் கல்லூரி, கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரி, ஸ்டான்லி மருத்துவ கல்லூரி இதெல்லாம் போய் பாருங்கள், இன்றைக்கு இந்தியாவிலே தலை சிறந்த மருத்துவர்கள் நம்முடைய அரசு மருத்துவக் கல்லூரியில் பயின்றவர்கள். நம்முடைய மருத்துவ கல்வி கட்டமைப்பு என்பது தெற்கு ஆசியாவிலேயே மிகச்சிறந்த ஒரு மருத்துவ மாநகராக நம்முடைய சென்னை மாநகரம் திகழ்ந்து கொண்டிருக்கிறது.

ஆக மருத்துவத்துறையில் நாம் எங்கு தோல்வி கண்டோம் ? மருத்துவ கல்வி முறையில் எங்கு தோற்று போனாம் ? ஏன் இந்த கல்விமுறை மாற்றப்படுகிறது என்று சொன்னால், இன்றைக்கு தமிழ்நாட்டில் சேர்ந்த மாணவர்கள் ஆண்டுக்கு குறைந்தபட்சம் 5,000 பேர் நம்முடைய தமிழ்நாட்டில் மருத்துவ கல்லூரிகளில், உதவி பெறும் மருத்துவக் கல்லூரிகளில், தனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசு இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் நாம் இன்றைக்கு படித்துக் கொண்டு வருகிறோம் என்று சொன்னால் இதிலே கொண்டு வந்து கை வைக்கிறார்கள்.

இந்த நீட் தேர்வு உண்மையில் படித்த மதிப்பெண் அடிப்படையில் அவர்கள் மதிப்பெண் வழங்கப்படுகிறது என்றால் அதுவும் இல்லை, இன்றைக்கு வடநாட்டு தேர்வு முறைகள் எல்லாத்துலயும் காப்பி அடிக்கிறதுக்கு அனுமதிக்கிறார்கள், அந்த மாநில அரசாங்கத்தின் சார்பில் தேர்வு வகுப்புக்கு செல்லும் சூப்பர்வைசரே  அந்த மாணவர்களுக்கு அதற்கான பதில் கூறுகிறார்கள், அங்கு கோல்மால் நடக்கிறது.

அதற்காக பயிற்சி மையங்கள் என்று புற்றீசல்கள் போல் இந்தியா முழுக்க நூற்றுக்கணக்கான பயிற்சி மையங்கள் இருக்கிறது. அந்த பயிற்சி மையத்தில் இங்கேயே உட்கார்ந்து இருக்கின்ற குழந்தையினுடைய அப்பா 3 லட்சம் ரூபாய் கொடுத்து ஒரு ஆண்டு பயிற்சிக்கு அனுப்பமுடியுமா ? இங்கே இருக்கின்ற எந்த ஒரு மாணவச் செல்வங்கள் நீட்க்கு சிறப்பு பயிற்சிக்கு நம் 3 லட்சம் ஆண்டுக்கு பணம் கட்டி மருத்துவத்திற்கு போய் நம் பயிற்சி எடுத்துக்கொள்ள முடியுமா ? என தெரிவித்தார்.

Categories

Tech |