Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஒமைக்ரான்…. அமைச்சர் சொன்ன மிக முக்கிய தகவல்…!!!!

தமிழகத்தில் ஒருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. நைஜீரியாவிலிருந்து இருந்து சென்னை வந்த நபர் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்,  நைஜீரியாவிலிருந்து தோஹா வழியாக சென்னை வந்தவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருடைய குடும்பத்தினருக்கும் மரபணு சோதனை நடத்தப்பட்டுள்ளது. அனைவரும் தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.

தமிழகத்தில் மொத்தம் எட்டு பேருக்கு ஒமைக்ரான் இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்து அதில் ஒருவருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. மற்றவர்களின் மாதிரிகள் பகுப்பாய்வு செய்தபின் முடிவுகள் தெரியும். உறுதி செய்யப்பட்ட நபர் நலமாக உள்ளார். இவர்கள் 2 டேஸ் தடுப்பூசி போட்டுள்ளனர். பொதுமக்கள் ஒமைக்ரான் கண்டு பதற்றம் அடையாமல் இதனுடைய தீவிரத்தை உணர்ந்து தடுப்பூசியை மறக்காமல் செலுத்தி கொள்ள வேண்டும். தமிழகத்தில் 15 சதவீத மக்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ளாமல் உள்ளனர். கூடியவிரைவில் 100% தடுப்பூசி என்ற இலக்கை எட்ட வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |