Categories
மாநில செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு முதல்வர் கொடுக்கும் ஷாக்…. முடிவை மாற்றுவாரா…? வெளியான முக்கிய தகவல்….!!!!

தமிழக அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 ஆக குறைப்பதற்கு முதல்வர் முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது.

கடந்த ஆண்டு நிலவிய கொரோனா பெருந்தொற்று காரணமாக தமிழக அரசுத் துறை ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை நீட்டித்து அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு பிறப்பித்தார். இதைத்தொடர்ந்து அரசுக்கு சில நிதி நெருக்கடிகள் ஏற்பட்டதையடுத்து அரசு ஊழியர்களுக்கான பணபலன்களைக் கொடுக்க முடியாததால் ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 58 லிருந்து 60 ஆக உயர்த்தி அறிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து தற்போது ஆட்சி அமைத்துள்ள முக ஸ்டாலின் தலைமையிலான அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை மீண்டும் 58 ஆக மாற்றுவதற்கு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இப்போது அரசின் இந்த முடிவை எதிர்பார்த்து 10 லட்சம் அரசு ஊழியர்கள் காத்துள்ளனர். 2022ஆம் ஆண்டு ஜனவரி 5ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற இருப்பதால் இந்த கூட்டத்தில் அரசு ஊழியர்களின் ஓய்வு குறித்த முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 60 ஆக அதிகரித்த காரணத்தினால் இளைஞர்களுக்கான அரசு வேலை என்பது கேள்விக் குறியாகிறது. அதே நேரத்தில் ஓய்வில் செல்லும் அரசு ஊழியர்களுக்கு பணபலன்களை வழங்கவும் அரசு போதிய நிதி இல்லை என்று தெரிவிக்கப்படுகிறது. அதனால் அரசு துறையில் 33 ஆண்டுகள் பணி புரிந்தவர்கள் 58 வயதில் ஓய்வு பெறுவார்கள் என்றும் , மற்றவர்கள் 60 வயது வரை பணியில் இருப்பார்கள் என்றும் தமிழக அரசு முடிவு செய்ய உள்ளதாக அரசுத் துறை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளது.

Categories

Tech |