Categories
தேசிய செய்திகள்

+2 மாணவர்களுக்கு இன்று முதல் தொடக்கம்…. சிபிஎஸ்இ அறிவிப்பு…!!!!

கடந்த ஒன்றரை வருடமாக நாடு முழுவதும் கொரோனா காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. எனவே மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. இதனையடுத்து பாதிப்பு படிப்படியாக குறைந்ததால் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப் பட்டுள்ளது. இந்தநிலையில் சிபிஎஸ்இ பிளஸ் டூ மாணவர்களுக்கான முதல் பருவ பொதுத் தேர்வு இன்று முதல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் பருவ தேர்வு இன்று முதல் டிசம்பர் 20 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. எந்தவித புகாருக்கும் இடம் கொடுக்காமல் தேர்வினை நல்ல முறையில் நடத்த பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது என்று தெரிவித்துள்ளது.

Categories

Tech |