Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

JUST IN: வங்கி ஊழியர்கள் போராட்டம்…. திமுக ஆதரவு….!!!!

பொதுத்துறை வங்கிகள் தனியார் மயமாக்கத்தை,அனுமதிக்கும் வங்கிகள் சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் கூட்டமைப்பு இன்று மற்றும் நாளை வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளது. கடைநிலை ஊழியர்கள் முதல் அதிகாரிகள் வரை இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதால் வங்கிகள் முழுமையாக மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் இரண்டு நாட்கள் பரிவர்த்தனை, ரொக்கம், டெபாசிட், ஏடிஎம் உள்ளிட்ட வங்கி சேவைகள் பெரும் அளவில் பாதிக்கப்படலாம்.

இந்த நிலையில் வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு திமுக ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளது. வங்கி சட்டத்திருத்த மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு தீவிரம் காட்டுவது ஜனநாயக விரோத செயல் என்றும் கண்டித்துள்ளது.

Categories

Tech |