Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

வேகத்தடை போன்ற அமைப்பு…. சடலத்தை வைத்து போராடிய உறவினர்கள்…. விருதுநகரில் பரபரப்பு…!!

வாலிபரின் சடலத்தை சாலையை வைத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டத்திலுள்ள கஞ்சம்பட்டி கிராமத்தில் கட்டிட தொழிலாளியான முத்துச்செல்வம் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கஞ்சாம்பட்டியிலிருந்து வெம்பக்கோட்டை செல்லும் சாலையில் இருக்கும் ஒரு தோட்டத்தில் மழைநீர் தேங்கி கிடந்துள்ளது. இதனை வெளியேற்றுவதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தை சற்று உயரமாக மூடி வைத்துள்ளனர். இந்த வழியாக இருசக்கர வாகனத்தில் முத்துச்செல்வம் சென்ற போது நிலைதடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். இவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி முத்துச்செல்வம் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார்.

இந்நிலையில் கஞ்சம்பட்டி விலக்கில் முத்து செல்வத்தின் சடலத்தை வைத்து அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அனுமதி இன்றி சாலையில் வேகத்தடை போன்ற அமைப்பு ஏற்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தொழிலாளியின் குடும்பத்துக்கு நிவாரண தொகை வழங்க வேண்டும் எனவும் உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இதனையடுத்து சுமார் 3 மணி நேரம் கழித்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Categories

Tech |