சாட்டையடி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தியுள்ளனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பூசாரிபாளையம் பகுதியில் அடைக்கலம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் சாட்டையடி திருவிழா நடைபெற்றுள்ளது.கடந்த 6-ஆம் தேதியன்று காலை 6 மணிக்கு கணபதி பூஜை தொடங்கி, 8 மணிக்கு கொடியேற்றம், முத்திரை வைத்தல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளது. இதனை அடுத்து இரவு 11 மணிக்கு பிடி மண் எடுத்தல், அம்மன் ஆற்றங்கரைக்கு செல்லுதல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளது.
இந்நிலையில் சாட்டையடி திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் தங்களது உடம்பில் சாட்டையால் அடித்தபடி முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் சென்றுள்ளனர். இதனைத்தொடர்ந்து அம்மன் அழைப்பு, திருக்கல்யாணம் போன்றவை நடைபெற்றுள்ளது. வருகிற 17-ஆம் தேதி சிறப்பு அபிஷேக பூஜையுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.