காதல் கணவர் இறந்ததால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்திலுள்ள பெருங்குடி பகுதியில் முத்துமாரி என்பவர் வசித்து வந்துள்ளார். இந்த பெண் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த பிரசாந்த் என்ற வாலிபரை காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு 5 மாத பெண் குழந்தை இருக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு சென்ற பிரசாந்த் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
இதுகுறித்து விசாரணை நடத்திய போது தங்கைக்கு திருமணம் செய்வதற்கு முன்னரே பிரசாந்த் திருமணம் செய்ததால் உறவினர்கள் அவரை திட்டியுள்ளனர். இதனால் குடும்பத்திற்கு அவமானம் ஏற்படுத்திவிட்டதாக கருதி மன உளைச்சலில் பிரசாந்த் தற்கொலை செய்தது தெரியவந்துள்ளது. இந்நிலையில் பிரசாந்த் சட்டையை அணிந்து, அவரது புகைப்படத்தை சட்டை பையில் வைத்து கொண்டு முத்துமாரி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முத்துமாரியின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதற்கிடையில் முத்துமாரி இறப்பதற்கு முன்பு தனது கையில் ” பிரசாந்த் மாமா ஐ லவ் யூ” என எழுதியுள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.