Categories
கிரிக்கெட் விளையாட்டு

சாஹலுக்கு விருந்து உறுதி – ரோஹித் சர்மா….!!

இந்திய அணியின் நட்சத்திர வீரரான ரோஹித் சர்மா, சக அணியின் சுழற்பந்து வீச்சாளரான சாஹலுக்கு இடையே நடைபெற்ற உரையாடல் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி தற்போது டி20 தொடரில் விளையாடிவருகின்றது. மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்று சமநிலையில் உள்ளது.

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முடிந்த இரண்டாவது டி20 போட்டிக்கு பின், இந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ரோஹித் சர்மா, பந்துவீச்சாளர்கள் யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ் ஆகியோர் விளையாட்டுத்தனமான உரையாடலில் ஈடுபட்டனர்.

அப்போது ரோஹித், சாஹலிடம் உங்களுக்கு பந்துவீச கடினமான பேட்ஸ்மேன் யார்? என்ற கேள்விக்கு, சாஹல் உடனே அது நீங்கள்தான் எனப் பதிலளித்தார். இந்தப் பதிலை கேட்ட ரோஹித் நான் உனக்கு இரவு விருந்து கொடுக்கிறேன் எனக் கூறியுள்ளார்.

Embedded video

இந்தக் காணொலியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. இதனைக் கண்ட ரோஹித் சர்மாவின் ரசிகர்கள் இந்தக் காணொலியை இணையத்தில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

Categories

Tech |