பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச்சென்ற தனியார் பள்ளி வாகனம் கட்டுப்பாட்டை இழந்து பனைமரத்தின் மீது மோதியது .
பாவூர்சத்திரம் அருகே பனைமரம் மீது தனியார் பள்ளி வாகனம் மோதியதில் டிரைவர் உட்பட 10க்கும் மேற்பட்ட குழந்தைகள் காயமடைந்தனர். தென்காசி மாவட்டம் சுரண்டையை சேர்ந்த தனியார் பள்ளி வாகனம் ஒன்று பள்ளிக் குழந்தைகளை ஏற்றிக்கொண்டு தென்காசிக்கு சென்றுள்ளது. அப்போது ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்த பள்ளி வாகனம் பனை மரத்தின் மீது மோதியது.
இதில் ஓட்டுனர் உட்பட 10க்கும் மேற்பட்டபள்ளிக் குழந்தைகள் காயம் அடைந்தனர். அவர்களுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.