வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள களக்காடு பகுதியில் கட்டிட தொழிலாளியான முத்துக்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 3 குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் மனைவியின் நடத்தை மீது சந்தேகம் ஏற்பட்டதால் முத்துக் குமாருக்கும், விஜயலட்சுமிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து ராஜலட்சுமி களக்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனை அடுத்து காவல்துறையினர் இருவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி முத்துக்குமாரை சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர். அதன் பிறகும் முத்துக்குமாருக்கு விஜயலட்சுமியின் நடத்தை மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் முத்துக்குமார் தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார்.
இதனை அடுத்து மயங்கிய நிலையில் கிடந்த முத்துக்குமாரை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி முத்துக்குமார் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.