Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பல்வேறு கோரிக்கைகள்…. மாற்றுத்திறனாளிகளின் போராட்டம்…. விருதுநகரில் பரபரப்பு….!!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்திலுள்ள வத்திராயிருப்பு வருவாய்த்துறை அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி தொகையை 3 ஆயிரம் ரூபாயாக உயர்த்த வேண்டும் எனவும், ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் மாற்று திறனாளிகளுக்கு முழுமையான சம்பளம் வழங்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து பொது கழிப்பிடங்கள் மற்றும் பேருந்து நிலையங்களில் மாற்றுத்திறனாளிகள் செல்வதற்காக 3 சக்கர வாகனம், சாய்தளம் போன்ற அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளனர். இந்த போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் நாகராஜ் தலைமை தாங்கியுள்ளார். இதில் தாலுகா செயலாளர் கணேசன், பொருளாளர் பழனிசாமி போன்றோர் கலந்து கொண்டனர்.

Categories

Tech |