உத்தரபிரதேச மாநில அரசு தனது ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வினை 28 சதவீதத்தில் இருந்து தற்போது 2021 ஜூலை மாதம் முதல் முன் தேதியிட்டு 31 சதவீதமாக உயர்த்துவதாக அறிவித்துள்ளது.
மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரையின்படி வருடத்திற்கு 2 முறை ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் முறையே அகவிலைப்படியினை உயர்த்தும். இவ்வாறு ஊழியர்களின் அகவிலைப்படியானது நாட்டின் நிதியாண்டில் வருவாய் இழப்பை பொறுத்து நிர்ணயிக்கப்படுகிறது. அகவிலைப்படி உயர்த்தப்படுவதால் ஊழியர்களின் அடிப்படை சம்பளம் மற்றும் அதனோடு தொடர்புடைய அனைத்து பலன்களையும் அதிகரிக்கும். ஆகவே ஊழியர்களின் பணி நிலைக்கு தகுந்தவாறு பலன்கள் வழங்கப்படுகிறது.
கடந்த 2020 ஜனவரி மாதத்தில் இறுதியாக 17 சதவீதமாக இருந்த DA ஆனது, கொரோனா தொற்று பாதிப்பால் நிலுவையில் வைக்கப்பட்டது. இதன் காரணமாக 3 தவணைகளாக அதாவது 18 மாதங்களுக்கான அகவிலைப்படியானது ஊழியர்களுக்கு வழங்கப்படாமல் இருந்தது. இதனையடுத்து ஊழியர்களின் கோரிக்கை வலுத்து வந்த காரணத்தினால் கடந்த ஜூலை மாதம் ஊழியர்களின் அகவிலைப்படி 28 சதவீதமாக உயர்த்தப்பட்டு அமலுக்கு வந்தது. இந்நிலையில் 2001 ஜூலை தவணைக்கான DA உயர்வு கடந்த நவம்பர் மாதம் அறிவிக்கப்பட்டு 3 சதவீதம் உயர்த்தப்பட்டது.
இதனால் ஊழியர்களுக்கு அகவிலைப்படி 31 சதவீதமாக உயர்ந்துள்ளது. மத்திய அரசின் முடிவை பின்பற்றி அனைத்து மாநில அரசுகளும் தங்களது ஊழியர்களின் DA உயர்வை அளிக்காமல் நிலையில் வைத்து இருந்தது. அதன்பின் மத்திய அரசு DA உயர்வை அமலுக்கு கொண்டு வந்த பிறகு, ஒவ்வொரு மாநில அரசுகளும் படிப்படியாக ஊழியர்களின் அகவிலைப்படியினை அறிவித்து வருகிறது. இதேபோன்று தற்போது உத்தரபிரதேச மாநில அரசு தனது ஊழியர்களின் இறுதியான DA உயர்வு 28 சதவீதமாக இருந்த நிலையில், தற்போது 2021 ஜூலை மாதம் முதல் முன்தேதியிட்டு 3% அதிகப்படுத்தி மொத்தம் 31 சதவீதமாக அறிவித்துள்ளது. ஆகவே அரசின் இந்த உத்தரவு ஜூலை மாதம் முதல் அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.