Categories
மாநில செய்திகள்

இன்று முதல் ஆரம்பம்…. ரயில் பயணிகளுக்கு மகிழ்ச்சி செய்தி…!!!!

பொள்ளாச்சி – திருச்செந்தூர், மதுரை வழியாக மற்றும் செங்கோட்டை – கொல்லம் ரயில் நிலையங்களுக்கு இடையே டிசம்பர் 15 ஆம் தேதி முதல்(நாளை) விரைவு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி திருச்செந்தூர் – பொள்ளாச்சி விரைவு ரயில் டிசம்பர் 15 முதல் திருச்செந்தூரிலிருந்து மதியம் 12.05 மணிக்கு புறப்பட்டு இரவு 8.40 மணிக்கு பொள்ளாச்சி சென்று சேரும் எனவும், மறுமார்க்கத்தில் பொள்ளாச்சி – திருச்செந்தூர் விரைவு ரயில் டிசம்பர் 16 முதல் பொள்ளாச்சியில் இருந்து காலை 6.40 மணிக்கு புறப்பட்டு மாலை 3.45 மணிக்கு திருச்செந்தூர் சென்று சேரும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் திருச்செந்தூர் – பொள்ளாச்சி  இடையேயான முன்பதிவில்லாத பயணியர் ரயில் இன்று முதல் இயக்கப்படுவதாக ரயில்வே நிர்வாகம் கூறியுள்ளது.

Categories

Tech |