கொரோனா பிரச்சினை முடிவடைவதற்குள் புதிதாக கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் நாடு முழுவதும் பரவி வந்த நிலையில் தற்போது தமிழகத்திலும் ஒருவருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. நைஜீரியாவிலிருந்து இருந்து சென்னை வந்த நபர் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், இரண்டு தவணை தடுப்பூசி, சமூக இடைவெளி, கை கழுவுதல் கட்டாயம் மாஸ்க் அணிதல் உள்ளிட்ட சுகாதார வழிமுறைகளை பொதுமக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும். நேரம் இல்பதட்டத்திற்கான நேரம் இல்லை. ஆக்கபூர்வமான ஒத்துழைப்பு மக்கள் அளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.