போலீஸ் ஏட்டு பீர் பாட்டிலுடன் ரகளையில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
தென்காசி மாவட்டத்திலுள்ள கடையநல்லூர் காவல் நிலையத்தில் ராஜகுரு என்பவர் ஏட்டாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ராஜகுரு சேர்ந்தமரம் வடக்கு புறத்தில் இருக்கும் ஒரு டாஸ்மாக் கடை பாரில் மது அருந்தியுள்ளார். இதனையடுத்து ராஜகுரு பார் விற்பனையாளரிடம் ஆம்லேட் வாங்கி வருமாறு ராஜ் என்பவரை வற்புறுத்தியுள்ளார். இதற்கு ராஜ் மறுப்பு தெரிவித்ததால் கோபமடைந்த ராஜகுரு கையில் பீர் பாட்டிலுடன் ரகளையில் ஈடுபட்டுள்ளார்.
இதுகுறித்து ராஜ் சேர்ந்தமரம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ராஜகுருவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில் ராஜகுரு பீர் பாட்டிலுடன் ரகளையில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.