Categories
தேசிய செய்திகள்

UPSC-ல் காலிப்பணியிடங்கள் எத்தனை?… விவரங்கள் என்ன?…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

இந்தியாவில் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (UPSC ) சிவில் சர்வீசஸ் தேர்வு மூலமாக காலிப்பணியிடங்களை நிரப்பி வருகிறது. ஆண்டின் தொடக்கத்தில் UPSC தேர்வாணையம் 700-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டது. இதற்கு பெரும்பாலானோர் விண்ணப்பித்த நிலையில் முதல் நிலை (Prelims) 27.06.2021=ம் தேதி  நடைபெற்றது. தற்போது Prelims தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு Mains தேர்வானது 07.01.2022, 08.01.2022, 09.01.2022, 15.01.2022 மற்றும் 16.01.2022 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.

தற்போது Mains தேர்வு எழுதும் தேர்வர்களுக்கான Admit Card வெளியாகியுள்ளது. தேர்வர்கள் Registration Id அல்லது Roll Number பயன்படுத்தி E-ADMIT CARD பெற்றுக்கொள்ள வேண்டும். இதில் தேர்வு நடைபெறும் தேதி இடம் குறித்த முக்கிய விபரங்களுடன் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்படும் பொருட்கள் குறித்த விவரங்கள் வழங்கப்பட்டிருக்கும். தகுதியானவர்களின் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் பயன்படுத்தி E-ADMIT CARD பெற்றுக்கொள்ளலாம். “Download E- Admit Card ” https://upsconline.nic.in/eadmitcard/admitcard_csm_2021/admit_card.php#hhh1

Categories

Tech |