Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“என்ஜின் ஸ்டார்ட் ஆகல” பேருந்தை தள்ளிய பொதுமக்கள்…. ஸ்தம்பித்த போக்குவரத்து…!!

பேருந்து நிலையத்தின் நடுவே நின்ற பேருந்தால்  போக்குவரத்து பாதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டத்திலுள்ள சென்னிமலை பேருந்து நிலையத்தில் தற்போது வணிக வளாகங்கள் மற்றும் நுழைவாயில்கள் அமைக்கும் பணியானது  நடைபெற்று வருகிறது. இதனால்   பேருந்து நிலையத்திற்கு வரும் பேருந்துகள் ஒரே நுழைவாயில் வழியாக உள்ளே சென்று  பின் வெளியே வருவதால் பேருந்து நிலையத்தில்  போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இந்நிலையில்  நேற்று ஈரோட்டில் இருந்து சென்னிமலை பேருந்து  நிலையத்திற்கு பயணிகளுடன்   அரசு பேருந்து வந்துள்ளது. பயணிகளை  இறக்கிய பிறகு   பேருந்து ஓட்டுனர் பேருந்தை திருப்புவதற்காக பின்னோக்கி  இயக்கியுள்ளார். அப்போது பேருந்து இயங்காததால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து பயணிகள் பேருந்தை தள்ளிய பிறகு அதன் என்ஜின் ஸ்டார்ட் ஆனது. அதன் பிறகு ஓட்டுனர் பேருந்தை ஈரோட்டுக்கு இயக்கி சென்றுள்ளார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |