டிக்டாக், பஜ்ஜி உள்ளிட்ட தடை செய்யப்பட்ட சில செயலிகளை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வரும் திட்டம் ஏதும் இல்லை என்று மத்திய அரசு கூறியுள்ளது. இதுபற்றி பகுஜன் சமாஜ் கட்சி எம்பி மலூக் நாகர் நாடாளுமன்ற மக்களவையில் கேள்வி எழுப்பினார்.
அந்த கேள்விக்கு பதிலளித்த தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், தடை செய்யப்பட்ட செயலிகளை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வருவது குறித்து எந்த திட்டமும் இப்போதைக்கு அரசிடம் இல்லை என்று கூறியுள்ளார். தொடர்ந்து இணைய குற்றங்களை பாதுகாப்பான பிரவுசர்கள் மூலம் கட்டுப்படுத்துவதற்கான மத்திய அரசு மாநிலங்களுடன் இணைந்து பணியாற்றி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.