லண்டனில் ஒரு இளம்பெண்ணை நான்கு நாட்களாக அறையில் பூட்டி வைத்து சாப்பாடு கொடுக்காமல் சித்திரவதை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
லண்டனில் இருக்கும் Kensington என்ற பகுதியைச் சேர்ந்த 29 வயதான, அப்துல் மீது, ஒரு இளம்பெண், ஒரு அறைக்குள் தன்னை அடைத்து வைத்து நான்கு நாட்களாக பாலியல் வன்கொடுமை செய்ததாக காவல் துறையினரிடம் புகார் தெரிவித்திருக்கிறார். அந்த புகாரில் இளம்பெண் தெரிவித்திருப்பதாவது, “எனது பிறந்த நாளின் போது அப்துல் என்னிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சித்தார்.
அவரைத் தடுக்க முயற்சித்தேன். அப்போது அவர் என்னைத் தாக்கி உதைத்து வற்புறுத்தி வீட்டிற்கு இழுத்துச்சென்று நான்கு நாட்களாக சாப்பாடு மற்றும் தண்ணீர் தராமல் இருட்டான அறையில் பூட்டி வைத்து கொடுமை செய்தார். அவரிடமிருந்து எப்படியோ தப்பி, என் உறவினர் வீட்டிற்கு சென்றேன்” என்று கூறியிருந்தார்.
அதன்பின்பு, காவல்துறையினர் அப்துலை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர். விசாரணையில், அப்துல், தன் குற்றத்தை ஒத்துக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதிபதி, அவருக்கு 22 வருடங்கள் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.