கதர் ஆலையை மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கண்டனூர் பகுதியில் கதர் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் உள்ளே சோப், ஆயில் தயாரிக்கும் பிரிவு, காலணிகள் தயாரிக்கும் பிரிவு, மகளிர் சுய உதவிக்ககுழுவினர் உற்பத்தி செய்யும் பனை ஓலையை பயன்படுத்தி உருவாக்கும் அழகு சாதனப் பொருள்கள் பிரிவு என அனைத்து பிரிவுகளையும் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்துள்ளார்.
இதனையடுத்து ஆலையில் உற்பத்தி செய்த பல்வேறு பொருட்கள் சந்தையில் விற்கப்படுவதாகவும், அதில் சோப், ஆயில், மற்றும் குறிஞ்சி குளியல் சோப் போன்றவை பொதுமக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாகவும் ஆட்சியர் கூறியுள்ளார். மேலும் இந்த ஆலையில் பல நிறுவனங்கள் மூலம் 200 பெண்கள் பணியாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.