Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

ரோட்டில் சுற்றித்திரியும் பசுக்கள்…. உரிமையாளர்களுக்கு அபராதம்…. அதிகாரியின் எச்சரிக்கை…!!

பசுக்கள் தெருவில் சுற்றித் திரிந்தால் உரிமையாளர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என பேரூராட்சி செயலாளர் எச்சரித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் பேரூராட்சி அலுவலகர் சந்திரகலா அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் பசு மாடுகளை வீட்டில்  கட்டிவைத்து வளர்க்க வேண்டும் என தெரிவித்துள்ளார். இந்நிலையில் பசு மாடுகள் போக்குவரத்திற்கு இடையூறாக சாலையில் சுற்றித்திரிந்தால் அவற்றை பிடித்து அடைப்பதோடு மட்டுமல்லாமல் உரிமையாளர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம்  விதிக்கப்படும்  என அவர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து  பிடிக்கப்பட்ட பசுக்களை பராமரிப்பதற்காக ஒரு நாளைக்கு சுமார் 500 ரூபாய் வசூலிக்கப்படும். பசுக்கள் பிடிக்கப்பட்ட 7 நாட்களுக்குள் உரிமையாளர்கள் அபராத தொகையை கட்டவில்லை என்றால் ப்ளூ கிராஸ் சொசைட்டி அல்லது கோசாலைக்கு பசுக்கள் அனுப்பப்படும் என அவர் எச்சரித்துள்ளார்.

Categories

Tech |