கஞ்சா விற்ற வாலிபரை கைது செய்து காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மயிலாடுதுறை மாவட்டம் கூறைநாடு ஆராயத்தெரு பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது .இந்த தகவலின்படி மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
அப்போது அங்கே கஞ்சா விற்பனை செய்த அதே பகுதியை சேர்ந்த கலைவாணன் என்பவரை மடக்கிப்பிடித்த போலீசார் அவரிடம் இருந்து 400 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதைத் தொடர்ந்து அவர் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.