அரசு பள்ளி மைதானத்தை அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களை பயன்படுத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது .
நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள அரசு பள்ளி மைதானத்தை தனியார் பள்ளி மாணவர்கள் பயன்படுத்துவதாகவும், விளையாட்டு அல்லாத நிகழ்வுகள் அங்கு நடைபெறுவதாகவும் கூறி வழக்குகள் தொடரப்பட்டது.
இந்த வழக்கு இன்று விசாரணை செய்த சென்னை உயர்நீதிமன்றம் தனியார் பள்ளி மாணவர்கள் அரசு மைதானத்தை பயன்படுத்துவது எப்படி? என்பது குறித்தும் சொந்தமாக மைதானம் இல்லாத தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கியது எப்படி? எனவும் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இது தொடர்பாக மூன்று வாரத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் என்று நீலகிரி மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளனர். மேலும் அரசு பள்ளிக்கு சொந்தமான மைதானத்தை அரசு பள்ளியில் பயிலும் மாணவர்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.