தமிழகத்தில் ரேஷன் கடைகளில் அரிசி தரம் குறைவாக இருந்தால் அதை அனுப்பிய கிடங்கின் முதுநிலை மண்டல மேலாளர், தரக்கட்டுப்பாட்டு மேலாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து பேசிய அமைச்சர் சக்கரபாணி, அனைத்து ரேஷன் கடைகளிலும் கார்டுதாரர்களுக்கு தரமான அரிசி உள்ளிட்ட உணவு பொருட்கள் சரியான எடையில் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்.
அரிசியின் தரம் குறைவாக இருந்தால் அதனை அனுப்பிய கிடங்கின் முதுநிலை மண்டல மேலாளர் மற்றும் தரக்கட்டுப்பாட்டு மேலாளர் ஆகியோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். எனவே பொருள்களின் தரத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். விவசாயிகளிடமிருந்து நெல்லை உடனுக்குடன் கொள்முதல் செய்ய வேண்டும். அதுமட்டுமல்லாமல் நெல்லை அரிசியாக மாற்றுவதற்கு அனுமதி அளித்துள்ள அரவை ஆலைகள் ரேஷன் அரிசியை முறைகேடாக வைத்திருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.