Categories
தேசிய செய்திகள்

போஸ்ட் ஆபிஸில் joint அக்கவுண்ட் வைத்திருப்பவர்களுக்கு…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!!

நாடு முழுவதிலும் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு சாரா அனைத்து ஊழியர்களும் தங்களது எதிர்கால தேவைக்கு பயன்படும் வகையில் சேமிப்பு கணக்கில் தொடர்ந்து வருகின்றனர். சேமிப்பு கணக்கு தொடரும் அனைவரும் தங்களது பணத்திற்கான பாதுகாப்பு, நல்ல ரிட்டன்ஸ் மற்றும் வட்டி விகிதம் போன்ற அனைத்து தகவல்களையும் முழுமையாக அறிந்து கொண்டு பின் சேமிப்பு தொடங்குவது நல்லது என்று கூறப்படுகிறது. அந்த வகையில் அனைவராலும் பாதுகாப்பான முதலீடாக கருதப்படும் அஞ்சல்துறை சேமிப்பில் ஏராளமானோர் தங்களது சேமிப்பை தொடர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அவ்வாறு சேமிப்பு தொடங்க திட்டமிடும் அனைவருக்கும் ஏற்றவாறு மத்திய அரசு பல்வேறு சிறந்த திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதாவது முதியவர்கள், நடுத்தர மக்கள், பெண் குழந்தைகள் பாதுகாப்பு, ஆண் குழந்தைகள் சேமிப்பு உள்ளிட்ட திட்டங்கள் அஞ்சல் துறையின் கீழ் இயங்கி வருகின்றன. அந்த அடிப்படையில் நடைமுறையிலுள்ள தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டம் மற்றும் மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டம் போன்ற இரண்டிலும் இணைப்பு கணக்கு வசதி உள்ளது.

அதன்படி இந்த 2 திட்டங்களின் கீழ் அதிகபட்சமாக 3 பேர் வரை இணைப்பு கணக்கு தொடர முடியும். இந்த திட்ட விதிமுறையின் A பிரிவில் இணைப்பு கணக்கில் உள்ள 3 பேருக்கு அல்லது கணக்கு உரிமையாளருக்கு ரிட்டன்ஸ் தொகை வழங்கப்படும். B பிரிவில் 3 பேரில் ஏதேனும் ஒருவருக்கு மட்டுமே இருப்பு தொகை வழங்கப்படும். மேலும் இந்த பிரிவின் மூலமாக கணக்கை ஒருவர் மட்டுமே கையாள முடியும் என்று தகவல் வெளியாகியது. சேமிப்பு கணக்கு தொடங்க அனைவரும் அந்த குறிப்பிட்ட திட்டத்தை பற்றி முழுமையாக தெரிந்து இருப்பது அவசியமாகும்.

Categories

Tech |