Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மாற்றுத்திறனாளிகளுக்கு பேஷன் ஷோ…. கலந்து கொண்ட முக்கிய பிரபலங்கள்…. வழங்கபட்ட விருதுகள்…..!!

மாற்றுத்திறனாளிகளுக்கான பேஷன் ஷோ நடைபெற்றுள்ளது.

சென்னை மாவட்டத்திலுள்ள ஆவடி சி.ஆர்.பி.எஃப் வளாகத்தில் இருக்கும் மைதானத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பேஷன் ஷோ நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் 50-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் மற்றும் சி.ஆர்.பி.எஃப்-ல் பணிபுரியும் அதிகாரிகளின் குழந்தைகள் 12 பேர் கலந்துகொண்டனர். இதில் சி.ஆர்.பி.எஃப் டி. ஐ.ஜி தினகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ளார்.

இந்நிலையில் தேசிய அளவில் கூடைப்பந்து, வீழ்சேர், பரா ஒலிம்பிக்கில் பங்கேற்ற 5 மாற்றுத்திறனாளிகளுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த பேஷன் ஷோவில் மாற்றுத்திறனாளிகள் மாடல் அழகிகளுடன் வீல்சேரில் வந்து பங்கேற்றனர். மேலும் பிக்பாஸ் பிரபலம் சம்யுக்தா உட்பட பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Categories

Tech |