Categories
தேசிய செய்திகள்

“ஒமிக்ரான் வைரஸ்”… குழந்தைகளை பாதிக்குமா?… விளக்கம் கொடுத்த மருத்துவர்….!!!!

குழந்தைகளை ஒமிக்ரான் தொற்று பாதிக்குமா என்பது தொடர்பாக டாக்டர் மோகன் குப்தே விளக்கம் அளித்துள்ளார்.

ஒமிக்ரான் தொற்று அதிகரிப்பதை கவனத்தில் கொண்டு ஒன்றிய அரசு தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு இருப்பதாக ICMR தொற்று நோய் பிரிவின் ஓய்வுபெற்ற இயக்குனர் டாக்டர் மோகன் குப்தே தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டாக்டர் மோகன் குப்தே பேட்டி அளித்தபோது, “தென்னாப்பிரிக்காவில் ஒமிக்ரான் வேகமாக பரவினாலும் ஆரம்ப நிலையில் அது மிகமான பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்தியாவிலும் ஒமிக்ரான் பரவல் அதிகரித்தால் அதை சமாளிக்க கூடிய அளவுக்கு மருத்துவத் துறையில் உள்கட்டமைப்புகளை ஒன்றிய மாநில அரசுகள் முன்கூட்டியே தயாராக வைத்திருக்க வேண்டும். அதற்குரிய நடவடிக்கைகளை ஒன்றிய அரசு செய்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போதைய நிலையில் குழந்தைகளுக்கு இந்த வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டாலும் அச்சமடையத் தேவையில்லை. பாதிப்புக்கு ஆளாகும் குழந்தைகளுக்கு நோயின் தாக்கம் மிகக் குறைவாகவே இருக்கும். மருத்துவமனையில் சிகிச்சை பெறும் அளவுக்கு மோசமான பாதிப்பு ஏற்படாது” என்று அவர் தெரிவித்துள்ளார்

Categories

Tech |