Categories
தேசிய செய்திகள்

டெபிட், கிரெடிட் கார்டு விவரங்களை பதிவு செய்ய இனி…. வெளியான அதிரடி அறிவிப்பு ….!!!!

டெபிட், கிரெடிட் கார்டுகளின் விவரங்களை பணப்பரிமாற்ற நிறுவனங்கள், முகமைகள் பதிவு செய்யக்கூடாது என்ற ரிசர்வ் வங்கியின் உத்தரவானது வரும் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

இணையதள வணிக நிறுவனங்கள் டெபிட், கிரெடிட் கார்டு வழங்கும் வங்கி மற்றும் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களின் பரிவர்த்தனைகளின் போது கார்டு விவரங்களை பதிவிட்டு அடுத்தடுத்த பரிமாற்றத்தின்போது தானாக பதிவிடும் முறையை கையாள்கின்றனது. இது வாடிக்கையாளர்களின் பரிவர்த்தனையில் பாதுகாப்பற்ற சூழலை உருவாக்குவதாக ரிசர்வ் வங்கியின் கவனத்திற்கு வந்தது.

அதன்பின் வாடிக்கையாளர்களின் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு விவரங்களை பதிவு செய்வதை தடை செய்து ரிசர்வ் வங்கி சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டது. இந்த விதிமுறையானது வரும் புத்தாண்டு முதல் அமலுக்கு வர இருக்கிறது. இதனைதொடர்ந்து ஒவ்வொரு பண பரிமாற்றத்தின்போதும் வாடிக்கையாளர் தனது கார்டில் எண் பெயர் காலாவதி தேதி சிவிவி, ரகசிய எண் ஆகிய விவரங்களை பதிவு செய்ய வேண்டியிருக்கும்.

Categories

Tech |