Categories
கிரிக்கெட் விளையாட்டு

AUS VS ENG ஆஷஸ் டெஸ்ட் : டேவிட் வார்னர், லபுஸ்சேன் அதிரடி ஆட்டம் ….! முதல் நாள் ஆட்ட முடிவில் ஆஸி 221/2 …!!!

ஆஷஸ் டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணிக்கெதிரான 2-வது டெஸ்டில் முதல் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா அணி 221 ரன்கள் குவித்துள்ளது .

இங்கிலாந்து- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது .இதில் இரு அணிகளுக்கு இடையே நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது .இதனிடையே இங்கிலாந்து -ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான 2-வது டெஸ்ட் போட்டி அடிலெய்டு ஓவல் மைதானத்தில்  இன்று தொடங்கியது .இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்தது .அதன்படி முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில் தொடக்க வீரர்களாக மார்கஸ் ஹாரிஸ் – டேவிட் வார்னர் ஜோடி களமிறங்கினர்.

இதில் மார்கஸ் ஹாரிஸ் 3 ரன்னில் ஆட்டமிழந்தார் . இதன்பிறகு களமிறங்கிய மார்னஸ் லபுஸ்சேன்,  டேவிட் வார்னர் உடன் ஜோடி சேர்ந்தார் .இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் அதிரடியாக விளையாடிய டேவிட் வார்னர் சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 95 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். இறுதியாக ஆஸ்திரேலியா அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 221 ரன்கள் குவித்துள்ளது. இதில் மார்னஸ் லபுஸ்சேன் 95 ரன்னுடனும் , ஸ்டீவ் ஸ்மித் 18  ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர். இதைத் தொடர்ந்து 2வது நாள் ஆட்டம் நாளை காலை ஒன்பது முப்பது மணிக்கு நடைபெறுகிறது

Categories

Tech |