இன்றைய காலகட்டத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் வாட்ஸ்அப் பயன்படுத்தி வருகின்றனர். இதில் வீடியோ கால், குரூப் சாட் உள்ளிட்ட பல அம்சங்கள் அடங்கியுள்ளதால் அனைவருடைய முக்கிய அங்கமாக இது மாறிவிட்டது. இந்த நிலையில் வாட்ஸ்அப் குரூப் சாட்டில் பிறர் அனுப்பும் குறுஞ்செய்தியை டெலிட் செய்ய அந்த குரூப் அட்மினுக்கு அதிகாரம் வழங்கும் புதிய அப்டேட்டை வாட்ஸ்அப் விரைவில் வெளியிடும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
வாட்ஸ் அப் வாயிலாக பொய் செய்திகளை பரவுவதை தடுக்கும் முனைப்பில் இந்த அம்சத்தை அறிமுகம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது .அடுத்த ஆண்டு துவக்கத்தில் இந்த அம்சம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.