தற்போதைய காலகட்டத்தில் பெரும்பாலான மக்கள் போஸ்ட் ஆபீஸ் பேமென்ட் வங்கி சேமிப்பு கணக்கு வைத்துள்ளனர். இந்த பேக்கில் சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் அனைவருக்கும் பல்வேறு வரம்புகள் உள்ளது. அதாவது குறிப்பிடப்பட்ட காலத்தில் இவ்வளவு பணம் தான் எடுக்க மற்றும் டெபாசிட் செய்ய வேண்டும் என்ற விதி முறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. அதன்படி வங்கியால் அறிவிக்கப்பட்ட லிமிடெட் தொகை அதிகமாக தொகை சேமிப்பு அவர்களுக்கு பான் கார்டு அவசியம். மேலும் குறிப்பிட்ட காலத்திற்கு வரையறுக்கப்பட்ட தொகைக்கு மேல் பணம் எடுத்தால் அல்லது டெபாசிட் செய்தால் வங்கி கணக்கிலிருந்து கட்டணம் வசூலிக்கப்படும்.
போஸ்ட் ஆபீஸ் பேமென்ட் பேங்கில் பேசிக் சேவிங்ஸ் கணக்கு வைத்திருப்பவர்கள் ஒரு மாதத்திற்கு நான்கு முறை இலவசமாக பண பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம். அதற்கு மேல் பணம் எடுக்கும் போது குறிப்பிட்ட கட்டணம் வசூல் செய்யப்படும். அதாவது சேமிப்பு கணக்கில் இருந்து எடுக்கப்படும் தொகையில் அபராத கட்டணம் 0.59% அல்லது ஒரு பரிவர்த்தனைக்கு 25 ரூபாய் வசூலிக்கப்படும். அதுமட்டுமல்லாமல் பேசிக் சேவிங்ஸ் கணக்கைத் தவிர மற்ற சேமிப்பு கணக்குகளுக்கு ஆயிரம் ரூபாய் வரை டெபாசிட் செய்யலாம், 25 ஆயிரம் வரை பணம் எடுத்துக்கொள்ளலாம். இந்த அனைத்து செயல்பாடுகளுக்கும் 0.50 சதவீதம் அல்லது 25 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும் என்று IPPB புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.