3 குழந்தைகளுக்கு தாயான பெண் திடீரென பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருபாலபந்தல் பகுதியில் தென்னரசு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவசக்தி என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில் சிவசக்தி திடீரென தனது வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்து விட்டு மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.
இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி சிவசக்தி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.