வீட்டின் சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கிளாப்பாளையம் கிராமத்தில் பூங்காவனம் என்பவர் வசித்து வந்துள்ளார்.
இவர் தனது குடிசை வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கும் போது வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளுக்கிடையே சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.