திருச்செந்தூர் – பாலக்காடு இடையிலான ரயில் சேவை இன்று முதல் தொடங்கி உள்ளதால் பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கொரோனா ஊரடங்கு காரணத்தால் கடந்த ஆண்டு முதல் திருச்செந்தூரில் இருந்து பயணிகள் ரயில் எதுவும் இயக்கப்படவில்லை. தற்போது தமிழக அரசு ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ள நிலையில் திருச்செந்தூரில் இருந்து பாலக்காடு செல்லும் விரைவு ரயில்கள் இன்று முதல் மீண்டும் இயக்கப்பட்டது. இதனால் திருச்செந்தூரில் இருந்து பாலக்காடு செல்லும் பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அதுமட்டுமில்லாமல் இந்த ரயிலானது பழநி வழியாக செல்லும் என்பதால் தென் தமிழகத்தில் இருந்து பல பக்தர்கள் பழனி சென்று வருகின்றனர். மீண்டும் ரயில் இயக்கப்படுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.