2 பில்லியன் பயனாளர்களை தாண்டியது இன்ஸ்டாகிராம் செயலி.
இன்ஸ்டாகிராம் தளம், இரண்டு பில்லியன் பயனர்களை தாண்டி சாதனை படைத்துள்ளது. கடந்த ஜூன் 2018 இல் ஒரு பில்லியனை கடந்து இருந்த எண்ணிக்கை மூன்று வருடங்களில் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு டிக் டாக் தடை செய்யப்பட்ட காரணத்தினால் அனைவரது கவனமும் இன்ஸ்டாகிராம் பக்கம் திரும்பியது. ரீலிஸ் அறிமுகம் போன்றவையால் கடைசி சில மாதங்களில் இன்ஸ்டாகிராம் பயனாளர்களின் எண்ணிக்கை வேகமாக உயர்ந்ததாக கூறப்படுகின்றது.