Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

ரிஷப இராசிக்கு “செல்ல பிராணிகளிடம் கவனம் தேவை”… சகோதர வழியில் உதவி.!!

ரிஷப ராசி அன்பர்களே…!!  இன்று நீங்கள் நண்பர்களிடம் வெளிப்படையாகப் பேசுவதில் தயக்கம் கொள்வீர்கள். தொழில் வியாபாரத்தில் அளவான மூலதனம் போதுமானதாக இருக்கும். அதிக உழைப்பால் மட்டுமே பணவரவு சீராக இருக்கும். செல்ல பிராணிகளிடம் விலகியிருப்பது நல்லது. இன்று ரகசியங்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்வது சிறப்பு. கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண்கள் பெறுவதற்கு எடுக்கக்கூடிய முயற்சிகள் வெற்றியைக் கொடுக்கும்.

வீண் மனக்கவலை கொஞ்சம் இருக்கும் பார்த்துக் கொள்ளுங்கள். கூடுமானவரை நிதானமாக செயல்படுங்கள். அதுமட்டுமில்லாமல் வெளியூர் பயணங்களை தவிர்ப்பது நல்லது. இன்று ஆன்மீக பணிகளில் நாட்டம் செல்லும். தெய்வத்திற்கு சிறு தொகையை இன்று செலவிட நேரிடும். இன்று கணவன் மனைவிக்கிடையே சின்னசின்ன பூசல்கள் இருக்கும். கூடுமானவரை பேசும்பொழுது கொஞ்சம் கவனமாக பேசுங்கள். குடும்பத்தில் ஒற்றுமை இருக்கும்.

சகோதர வழியில் உங்களுக்கு உதவிகளும் கிடைக்கும். இன்று மாணவர்கள் கொஞ்சம் கடினப்பட்டு பாடங்களை படிக்க வேண்டி இருக்கும். கஷ்டப்பட்டு படியுங்கள், படித்த பாடத்தை எழுதிப் பாருங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். மஞ்சள் நிறம் அதிர்ஷ்டத்தைக் கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள். அனைத்துக் காரியமும் உங்களுக்கு நல்லபடியாகவே நடக்கும்.

 

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு

அதிஷ்ட எண் : 4 மற்றும் 6

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் சிவப்பு நிறம்

Categories

Tech |