Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அனைத்து ரேஷன் கடைகளுக்கும்…. பறந்த அதிரடி உத்தரவு…!!!!

ரேஷன் கடைகளில் தரமற்ற அரிசி விநியோகிக்கப்படுவதாக தொடர்ந்து புகார் எழுந்து வந்தது. இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, அனைத்து நியாயவிலை கடைகளிலும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு தரமான அரிசி உள்ளிட்ட உணவு பொருட்கள் சரியான எடையில் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். அரிசியின் தரம் குறைவாக இருந்தால் அதை அனுப்பிய கிடங்கின் முதுநிலை மண்டல மேலாளர் தரக்கட்டுப்பாட்டு மேலாளர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

எனவே இதன் காரணமாக, மக்களுக்கு வழங்கப்படும் பொருட்களின் தரத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். நெல்லை அரிசியாக மாற்ற அனுமதி அளித்துள்ள அரவை ஆலைகளில் தரமற்ற அரசில் முறைகேடாக வைத்திருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |