Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மன வேதனையில் இருந்த பெண்…. திடீரென எடுத்த விபரீத முடிவு…. வேதனையில் குடும்பத்தினர்….!!

பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஒட்டப்பிடாரம் பகுதியில் தீபராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஐஸ்வர்யா என்ற மனைவி இருந்துள்ளார். இவர்கள் இருவருக்கும் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்று 1 மகன், 2 மகள்கள் உள்ளனர். இதில் அவரது மகன் மூளை வளர்ச்சி குன்றியும், கை மற்றும் கால்கள் செயல்படாத நிலையில் இருந்துள்ளது.

இதனால் மனவேதனையில் இருந்த ஐஸ்வர்யா திடீரென வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்துக் குடித்துள்ளார். இதனைப் பார்த்த அவரது கணவர் ஐஸ்வர்யாவை உடனடியாக மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி ஐஸ்வர்யா பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |