லோடு ஆட்டோ மீது வேன் மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள குலசேகரப்பட்டினம் அண்ணாசிலை பகுதியில் தர்மராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு முத்துகிருஷ்ணன் என்ற மகன் உள்ளார். இவர்கள் இருவரும் தண்ணீர் கேன் விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் முத்துகிருஷ்ணன், தனது தந்தை தர்மராஜ் மற்றும் அதே பகுதியில் வசிக்கும் ராஜா ஆகியோருடன் உடன்குடி சந்திப்பு சாலைக்கு செல்ல ,முயன்றது. அப்போது ஈரோடு மாவட்டத்திலுள்ள முத்துமாணிக்கம் நகர் பகுதியில் வசிக்கும் சுமார் 20 பேர் சுற்றுலா வேனில் ராமேஸ்வரம், கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா சென்றுவிட்டு அங்கிருந்து திருச்செந்தூர் வந்து கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வேன் சாலையை கடக்க முயன்ற தண்ணீர் கேன் வந்த லோடு ஆட்டோ மீது மோதியது. இதில் தர்மராஜ் முத்துகிருஷ்ணன், ஈரோட்டில் வசிக்கும் சந்தோஷ், ஜெகதீஷ், பிரிதா, நடராஜ், நவீன் உள்ளிட்ட 12 பேர் பலத்த காயமடைந்தனர். இதனைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் அவர்களை உடனடியாக மீட்டு திருச்செந்தூர், தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி தர்மராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து காயமடைந்த 11 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.