Categories
தேனி மாவட்ட செய்திகள்

தொடர்ந்து நடக்கும் கடத்தல்…. வசமாக சிக்கிய லாரிகள்…. 7 டன் அரிசி பறிமுதல்….!!

போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் லாரியில் கடத்த முயன்ற 7 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

தேனி மாவட்டத்தில் இருந்து ரேஷன் அரிசி கடத்துவது அதிகரிக்கும் நிலையில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் உத்தமபாளையம் ஒருங்கிணைந்த நீதிமன்றம் அருகே உத்தமபாளையம் இன்ஸ்பெக்டர் தலைமையில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதி வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்ததில் 50 கிலோ ரேஷன் அரிசி இருந்துள்ளது. அதனை பறிமுதல் செய்த காவல்துறையினர் லாரி டிரைவரான கணேசன் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர்.

அந்த விசாரணையில் கணேசன் கம்பம் பகுதியில் ரேஷன் அரிசிகளையும் மொத்த விலைக்கு வாங்கி அதனை குருணையாக மாற்றி நாமக்கலுக்கு கடத்தி செல்வது தெரியவந்துள்ளது. மேலும் பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசிகளை உணவு கடத்தல் பிரிவு காவல் துறையிடம் ஒப்படைத்துள்ளனர். இதேபோல் கூடலூர் பகுதியில் நடத்திய வாகன சோதனையில் மினிலாரியில் கேரளாவிற்கு கடத்தி செல்ல முயன்ற 1 1/2 டன் ரேஷன் அரிசியை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இதனையடுத்து மினி லாரி டிரைவர் பிரசாத் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |