Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“செல்போன் வாங்கி தாங்க” பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

கணவர் செல்போன் வாங்கி தராததால் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாராபுரம் பகுதியில் காமராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் பெயிண்டராக உள்ளார். இவருக்கு ஜீவிதா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் இருவருக்கும் செல்போன் பேசுவதில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் ஜீவிதா தனக்கு புதிய செல்போன் வாங்கி தருமாறு காமராஜரிடம் கேட்டுள்ளார். அதற்கு காமராஜ் வீட்டில் இருக்கும் உனக்கு எதுக்கு செல்போன் எனக் கேட்டுள்ளார். ஆனால் ஜீவிதா செல்போன் வாங்கி கொடுக்க வேண்டும் என்று அடம்பிடித்துள்ளார்.

இதனால் மன உளைச்சலில் இருந்த ஜீவிதா திடீரென வீட்டில் துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த தாராபுரம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஜீவிதாவை உடனடியாக மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஜீவிதாவின் தந்தையான அமாவாசை என்பவர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தற்கொலைக்கான காரணங்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |