மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டத்திலுள்ள சங்கொலிகுப்பம் பகுதியில் சதீஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரும் அதே பகுதியில் வசிக்கும் ராமமூர்த்தி, குமார் ஆகியோர் தனியார் கம்பெனியில் மூட்டை தூக்கும் தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் வேலை முடிந்த பிறகு 3 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு புறப்பட்டுள்ளனர். இவர்கள் சங்கொலிகுப்பம் அருகில் சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வேகமாக வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த சதீஷ், ராமமூர்த்தி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டனர்.
அதன்பின் உயிருக்கு போராடி கொண்டிருந்த குமாரை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சதீஷ் மற்றும் ராமமூர்த்தியின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.