கோவில் உண்டியலை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பாளையம் கிராமத்தில் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்நிலையில் மர்ம நபர்கள் நள்ளிரவு நேரத்தில் கோவிலுக்குள் நுழைந்து விட்டனர். அதன் பின் மர்மநபர்கள் கோவிலில் இருந்த உண்டியலை பெயர்த்து தூக்கி சென்றுள்ளனர்.
அதில் சுமார் 50 ஆயிரம் ரூபாய் பணம் இருக்கலாம் என கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கோவிலில் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.