கடையில் இருந்த 8 லட்ச ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்திலுள்ள எழுகடல் அக்ரஹாரம் பகுதியில் பிரவீன் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அழகு சாதன பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் மர்ம நபர்கள் பிரவீன் குமாரின் கடைக்குள் நுழைந்துவிட்டனர். இதனையடுத்து மர்மநபர்கள் கடையில் இருந்த 8 லட்ச ரூபாயை கொள்ளையடித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.
அதன்பின் மறுநாள் காலை கடைக்கு சென்ற பிரவீன் பணம் திருடப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து பிரவீன்குமார் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கடையில் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.